
டைரக்டர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்பவது எப்படி. சித்தார்த் - அமலாபால் இணைந்து நடித்த இப்படம் சத்தம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி ஹிட் லிஸ்டில் இணைந்தது. இப்போது இந்த படத்தை இந்தியில் இயக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். படத்தை இயக்குவது அதே இயக்குனர் பாலாஜிதானாம். ஆனால் படத்தில் நாயகன், நாயகியாக யாரை போடுவது என்று பரிசீலனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட அமலா பால், உடனே இயக்குனரைத் தொடர்பு கொண்டு, இந்தியிலும் நானே நடிக்க விரும்புகிறேன், வேறு யாரையும் முடிவு செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் இயக்குனர் அதற்கு உறுதி அளித்துள்ளாரா? என்பது தெரியவில்லை.
0 comments:
Post a Comment